Thursday, January 13, 2011

இந்தப்படத்தினை பார்க்காதிர்கள்

இந்தப்படத்தினை பார்க்காதிர்கள்

எச்சரிக்கை :

                        இந்த தலைப்பு இந்த பதிவினை  படிக்கவைக்கும் ட்ரிக் என மட்டும் நினைத்துக்  கொண்டு மட்டும் இந்தப்  பதிவை படிக்க ஆரம்பிக்க வேண்டாம். நீங்கள் இளகிய மனம் படைத்தவரா,அல்லது உங்கள் blood test-ன் போது உங்கள் blood-டை பார்த்து மயக்கம் போட்டவரா,தயவு  செய்து இப்பொழுதே இந்த பதிவை விட்டு வெளியே சென்று விடுங்கள்,இதெல்லாம் என்னயா எங்களை பார்த்தால் பயத்துக்கே பயம் வரும் என நினைப்பவர்கள் தாராளமாக இந்த படத்தைப் பார்க்கலாம்.......
    
            மதனின் மனிதனுக்குள் மிருகம் எத்தனைப் பேர் படித்தீர்கள் என தெரியவில்லை,அதில் நம்  ஒவ்வொருவருக்குள்ளும ஒரு மிருகம் இருக்கிறது ,அது எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே வரலாம்,நமக்கும் physco-களுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு புள்ளி அளவுதான் என்று சொல்லிருப்பார்.

                       நீங்கள் உங்களை யாராவது தொடர்ந்து தொந்தரவு செய்தால்,அவர்களை என்ன செய்வீர்கள், அட்லீஸ்ட் அடிக்கவாவது செய்வீர்கள்,அல்லது அடிக்கத்  தோன்றும் அல்லவா,அதுபோல் தான் serial killers-க்கு ஒரு படி மேலே கொலைப் பண்ண தோன்றும். நமக்குள் இருக்கும் மிருக்கதனம் 20-30 வயதுக்குள்  தான் வெளியே வர வேண்டும் என்பது  கிடையாது,இளம்வயதில் நார்மலாக இருந்துவிட்டு 45-வது வயதில் முதல் கொலைச்  செய்த கல்லூரி ஆசிரியர் ஒருவர் இருந்திருக்கிறார் ,So  இவைகள் அனைத்தும் நம்ப மறுக்க நினைத்தாலும் நம்பியே ஆக வேண்டிய கசப்பான உண்மைகள்.......

                        சரி இப்போ நாம படத்துக்கு வருவோம்,எதுக்கய்யா இப்படி எல்லாம் படம் எடுக்குறாங்க,அத எடுத்தாலும் நாம எதுக்கு அதை பார்க்கணும்,தேவை இல்லாம அந்த பிம்பங்களை நமது மனதில் எதுக்கு பதியவைக்க வேண்டும்,இப்படி எல்லாம் நான் நினைச்சாலும்,படம்  download ஆனாவுடன் அப்படி என்ன தான் அதுல இருக்கு எல்லாரும் ஓவரா இதுக்கு build-up தராங்களே,நாம பாக்காத horror-ரா Matrys-சே தனியாத்தானே  பார்த்தோம்,(அதை எப்படி பார்த்தேன்கிறது வேற கதை),இதைப்  பார்க்க மாட்டோம்மானு ஒரு ஏலனத்துல  படத்தப் போட்டேன்.

                         படம் ஆரம்பித்தது என்னவோ மெதுவாகத்தான்,  போகப் போக  படம் அப்படி ஒரு கொடுரம்,ரத்தம்,கொலை,வன்முறை இன்னும் என்னன்ன மோசமான வார்த்தைகள் இருக்கோ போட்டுக்குங்க,படத்தை அப்பப்ப pause பண்ணிட்டு,இது வெறும் படம் தான்,நிஜம் இல்லை,ரத்தம் எல்லாம் உண்மை கிடையாது,makeup என என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டு படத்தைப் பார்த்தேன்,அந்த சமாதானம் எல்லாம் திரும்ப படத்தைப் போட்டவுடன் கன நேரத்தில் காணாமல் போனது. 

                        இதுக்கு மேல நான் படத்தின் கதையை பற்றி சொல்லப் போகின்றேன்,படத்தை suspense குறையாமல் பார்க்கவிரும்பவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளவும்.


                    Sarah ஒரு விபத்தில் தன் கணவனை இழந்த நிறை மாத கர்பிணி,,ஒரு கிறிஸ்துமஸ் இரவில் தனியாக வீட்டில் இறுக்கிறார்(இதற்கு முன்னர் டாக்டர் அவரை பரிசோதித்துவிட்டு எந்நேரம் வேண்டுமானாலும் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என கூறிவிட்டு காலையில் வந்து அட்மிட் ஆகிக்கொள்ளுமாறு கூறுகிறார்),Sarah இப்போ வீட்டில் தனியாக இருகிறார்(இப்போ நமக்கு ஒரு ஏண்ணம் தோன்றுகிறது,நிறை மாத கர்பிணியாக இருக்கும் பெண் என்ன ________க்கு தனியாக இருக்க வேண்டும்),இதில் கர்ப்பம் வேறு,இப்போ பெயர் தெரியாத ஒரு பெண் Sarah வீட்டினுள் நுழைகிறார்,நுழைகிறார் என்றால் மிக மிக சாவகாசமாக நுழைகிறார் ,சமையல் அறையில் நுழைந்து நல்ல கூர்மையான கத்தியை எடுத்துக்கொண்டு  தூங்கிகொண்டு இருக்கும் Sarah-வின் அறைக்குள் நுழையும் அந்த பெண்(இங்கே இரண்டு விசயங்களை நான் சொல்ல விரும்புகிறேன் முதல் Sarah கர்பமானவள்,இதனாலே நமக்கு ஒரு வித பயம் ஏற்ப்பட்டுவிடுகிறது இரண்டு இந்த காட்சிகள் அனைத்தும் மிக மெதுவாக,மிக நுணுக்கமாக படமாக்கப்பட்டுள்ளது)  ஆற அமர உட்காந்து Sarah-வின் வயிற்றின் மேல் கத்தியை வைத்து அவளது தொப்புளில் கத்தியை சொருகுகிறார்,சட்டென்று விழிக்கும் Sarah அவர் சுதாரிப்பதர்ற்குள் கத்தி அவரின் உதடுகளுக்குள் பாய்கிறது,அந்த பெண்ணை தள்ளி விட்டுவிட்டு குளியல் அறையுனுள் சென்று கதவை சாத்திக்   கொள்கிறார்,வாயில் பட்ட கத்தி குத்துனால் இவரால் சத்தமாக அழகூட முடியவில்லை,    

                          இதற்கிடையில் Sarah-வின் அம்மா வீட்டிற்குள் வருகிறார்,தனது மகளை தேடும் அந்த தாய் குளியல் அறை கதவை திறக்க முற்படும் போது,Sarah அந்த பெயர் தெரியாத பெண்தான் என நினைத்து குளியல் அறையில் இருக்கும் கண்ணாடியை கொண்டு தனது அம்மாவின் கழுத்தில் சொருகுகிறார்,இதில் அந்த கண்ணாடி இடது புறம் இருந்து வலது புறம் வரை செல்கிறது,தனது அம்மா தன் கண் முன்னே தன்னால் துடிதுடித்து சாவதை பார்க்கும் Sarah-வால் ஒன்றும் செய்ய இயலாமல் கதறுகிறார் திரும்பவும் தன்னை காப்பாற்றி கொள்ள குளியல் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்கிறார்,
          Sarah-வை தேடி வரும் police-சை நான்  தான் Sarah என கூறி அனுப்பிவிடுகிறார்,இதற்கிடையில் Sarah தப்பிக்காமல் இறுக்க அவரது கையை சுவரில் ஆணியை கொண்டு calender அடிப்பது போல அடித்துவிட்டு செல்கிறார்,அந்த வீட்டுக்கு வரும் அனைவரையும் சரமாரியாக அந்த பெண் கொள்கிறார்,இவ்வளவு கொடூரமான பெண் physco-வை நான் இப்பொழுதுதான் முதல் முறையாக பார்க்கின்றேன்,என்ன ஒரு கொடூரமான பெண்,போதும் இதுக்கு மேல வேண்டாம் என நினைக்குறேன்,படத்தின் கிளைமாக்ஸ் தான் உச்சகட்டம்,கிளைமாக்ஸ்ஸ நான் அடுத்த நாள் காலையில் தான் பார்த்தேன்,கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க எனக்கு தலை சுற்றி மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது,அந்த கொளந்தைய கிழிச்சு யெடுக்கும் கட்சியை பார்க்க யாருக்கும் தைரியம் வராது,





                            என்னோட கேள்வி இதுதான்  எதுக்கு இவ்வளவு கொடூரமாக ஒரு படத்தை எடுக்க வேண்டும்,இதை திரையில் எப்படி பார்த்து இருப்பாங்கனு எனக்கு தெரியல,matrys-ல ஒரு core இருக்கும்,ஆனா  இதுல அப்படி எதுவும் இருக்கிற மாதிரி எனக்குத்தெரியல,என்ன பொறுத்த வரைக்கும் இந்த படத்தை தயவு செய்து யாரும் பார்க்கவேண்டாம்......


சரி கடைசி வரைக்கும் படத்தோட பெயரே சொல்லலியேனு யாரோ முணுமுணுக்கறது கேட்குது,பாக்காதிங்கனா கேட்கவா போறீங்க 

அந்த படத்தோட பெயர் INSIDE (2007)      

திரும்பவும் சொல்கிறேன் இந்த படத்தை பார்க்காதிர்கள் .

பி.கு: இவர்களின் மற்றும் ஒரு தயாரிப்பு Frontiere(s),inside அளவுக்கு இல்லை யென்றாலும் அதுவும் கொடூரமே.

இதையெல்லாம் பாத்து mood out ஆகி இருந்தால் இதை பார்த்து சிரித்துக்கொள்ளவும்.



படிச்சிட்டு எல்லாரும் போய்டாதிங்க, Please Do Comments....:))  

                      
                              

                              


          


Read more!